2025 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மூலதனச் செலவினமானது 16 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து 46,076.54 கோடி ரூபாயாக இருந்தது.
இது 2024 ஆம் நிதியாண்டில் 39,540.90 கோடி ரூபாயாக இருந்தது.
2025 ஆம் நிதியாண்டில் தற்காலிக மூலதனச் செலவினமானது, 2018-2024 ஆம் நிதி ஆண்டில் பதிவான 12.3 சதவீதம என்ற ஒரு கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தினை (CAGR) விட மிகச் சிறப்பாக பதிவானது.
2025 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு நிதிநிலை ஒதுக்கீடு இலக்கில் 95.2 சதவீதத்தினை எட்டியுள்ளது.
இது 2024 ஆம் நிதியாண்டில் பதிவான 86.2% மற்றும் 2023 ஆம் நிதியாண்டில் 95.4 சதவீதத்தினை விடவும், 2018-2024 ஆம் நிதியாண்டுகளில் பதிவான 88.1 சதவீதத்தினை விடவும் மிகவும் சிறப்பாக உள்ளது.
2026 ஆம் நிதியாண்டில், மாநில அரசானது சுமார் 57,231 கோடி ரூபாய் மூலதனச் செலவினத்தினை மதிப்பிட்டுள்ளது.
இது 2025 ஆம் நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து 22.38% வளர்ச்சி ஆகும்.
நிகரக் கடன்கள் மற்றும் முன்பணங்கள் உட்பட மாநிலத்தின் மொத்த மூலதனச் செலவினம் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை ஒதுக்கீட்டு மதிப்பீடுகளில் 65,328 கோடி ரூபாயாக மதிப்பிடப் பட்டுள்ளது.