TNPSC Thervupettagam

2025 நிதியாண்டுக்கான இந்திய மாநிலங்களின் GSDP தரவரிசை

February 28 , 2026 7 days 87 0
  • 2025 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது என்பதோடு இது வளமான மற்றும் ஏழ்மையான மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை (UTs) வரிசைப்படுத்துகிறது.
  • ஒரு மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தியை GSDP (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி) அளவிடுகிறது.
  • மகாராஷ்டிரா மாநிலம், நிதி, உற்பத்தி மற்றும் சேவைகள் மூலம் 45.32 லட்சம் கோடி அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பணக்கார மாநிலமாக உள்ளது.
  • வாகன உற்பத்தி, தொழில்துறை உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) ஆகியவற்றின் முன்னணி ஆதரவில் 31.19 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 29.78 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதோடு இது உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.
  • அருணாச்சலப் பிரதேசம் 4,423 கோடியுடன் மிகக் குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளது என்பதோடு அதைத் தொடர்ந்து திரிபுரா 8,968 கோடியுடன் மற்றும் இமாச்சலப் பிரதேசம் 23,169 கோடியுடன் உள்ளன.
  • தென் மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதோடு அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறிய ஒன்றியப் பிரதேசங்கள் குறைந்த மக்கள் தொகை மற்றும் புவியியல் காரணமாக குறைந்த GSDP ஐக் கொண்டுள்ளன.
  • 2024–25 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டு மொத்த உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்