TNPSC Thervupettagam

2025–26 ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி

November 15 , 2025 13 hrs 0 min 20 0
  • இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ISMA) படி, 2025–26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 18.6% அதிகரித்து 30.95 மில்லியன் டன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிரா (13.0 மெட்ரிக் டன்), உத்தரப் பிரதேசம் (10.32 மெட்ரிக் டன்) மற்றும் கர்நாடகா (6.35 மெட்ரிக் டன்) ஆகிய மாநிலங்களில் அதிக உற்பத்தி எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2024–25 ஆம் ஆண்டிற்கான மொத்த கரும்பு சாகுபடி பரப்பளவு 5.735 மில்லியன் ஹெக்டேர் ஆகும்.
  • 5 மில்லியன் டன்கள் தொடக்க சரக்கு இருப்பு மற்றும் 3.4 மில்லியன் டன்கள் எத்தனால் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்ட இருப்பு ஆனது, மொத்தச் சர்க்கரை கிடைக்கும் தன்மை 35.95 மில்லியன் டன்களாக வழங்கும்.
  • 2 மில்லியன் டன்கள் வரையிலான ஏற்றுமதி திறனுடன், உள்நாட்டு நுகர்வு ஆனது 28.5 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்