TNPSC Thervupettagam

2025–26 நிதியாண்டில் மின் உற்பத்தித் திறன்

February 21 , 2026 2 days 23 0
  • நடப்பு நிதியாண்டில் ஜனவரி 31, 2026 வரை இந்தியா 52,537 மெகாவாட் (மெகாவாட்) மின் உற்பத்தித் திறனைச் சேர்த்துள்ளதாக மின் அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இது இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வருடாந்திர மின் உற்பத்தித் திறன் இணைப்பாகும் என்பதோடு இது 2024–25 நிதியாண்டில் முந்தைய சாதனையான 34,054 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை விட அதிகமாகும்.
  • மொத்த மின் உற்பத்தியில், சுமார் 39,657 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெறப்பட்டது என்பதோடு இதில் சுமார் 34,955 மெகாவாட் சூரிய சக்தியிலிருந்தும் 4,613 மெகாவாட் காற்றிலிருந்தும் பெறப்பட்டது.
  • ஜனவரி 31, 2026 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் 5,20,510.95 மெகாவாட்டாக உள்ளது.
  • மொத்த திறனில் சுமார் 50.5% புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்தும், 48% புதைபடிவ எரிபொருட்களிலிருந்தும், 1.6% அணுசக்தியிலிருந்தும் வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்