TNPSC Thervupettagam

2026ல் இந்தியாவின் மிகப்பெரிய எல்பிஜி (LPG) விநியோகஸ்தர்

August 16 , 2026 2 days 36 0
  • 2026ம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய எல்பிஜி (LPG) விநியோகஸ்தராக அமெரிக்கா திகழும்.
  • இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் 67 சதவீதப் பங்களிப்பை அமெரிக்கா கொண்டு உள்ளது.
  • ஆற்றல் விநியோக ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவின் எல்பிஜி தேவையில் சுமார் 10 சதவீதத்தை அமெரிக்காவிலிருந்து பெறுவது என்ற அரசின் முந்தைய முடிவை அடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
  • மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா தனது சிலிண்டர் அடைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் எரிவாயு (எல்பிஜி) தேவையில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வந்தது; இதில் சுமார் 90 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே வந்தது.
  • வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி குறைந்துள்ளதை ஈடுசெய்யும் வகையில், இந்தியா தனது உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியையும் அதிகரித்துள்ளது.
  • மேலும், கச்சா எண்ணெய் விநியோகத்திற்கான நாடுகளின் எண்ணிக்கையை 27-லிருந்து 41-ஆக இந்தியா விரிவுபடுத்தியுள்ளது.
  • ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வை ஊக்குவிக்கும் நோக்கில், 84,000 கோடி ரூபாய் மதிப்பிலான 'சமுத்ரா மந்தன்' திட்டத்திற்கும் அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்