சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான பிராந்திய கூட்டுறவு ஒப்பந்தத்தின் (RCA) தலைவர் பதவியை இந்தியா ஏற்றுள்ளது.
மகாராஷ்டிராவின் நவி மும்பையில் நடைபெற்ற தேசியப் பிரதிநிதிகளின் 48-வது கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அமைதியான பயன்பாட்டை RCA ஊக்குவிக்கிறது.
சுகாதாரம், விவசாயம் மற்றும் ஆற்றல் ஆகிய துறைகளில் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் ஆதரிக்கிறது.
1972 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த RCA-வில் இந்தியா ஒரு நிறுவன உறுப்பினர் ஆகும் என்ற நிலையில் தற்போது இதில் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 22 உறுப்பு நாடுகள் உள்ளன.