TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டிற்குள் 2வது பெரிய சூரியசக்தி உற்பத்தியாளர் நாடு

April 11 , 2023 774 days 338 0
  • இந்தியா, சூரிய சக்தி உற்பத்தியில் தன்னிறைவுப் பெற உள்ளதோடு, மேலும், 2026 ஆம் ஆண்டில் ஒளி மின்னழுத்தக் கலங்களின் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நாடாக விளங்கும்.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 18GW ஆக இருந்த, இந்தியாவின் ஒட்டுமொத்த அதிக பட்சத் தொகுதி உற்பத்தித் திறனானது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3 8GW ஆக உயர்ந்து இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
  • இனிமேல் நிறுவப்பட உள்ள ஒளி மின்னழுத்தக் கலங்களின் உற்பத்தி நிறுவல்களின் அடிப்படையில், குஜராத் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உள்ளது.
  • இது இனிமேல் நிறுவப்பட உள்ள அனைத்து ஒளி மின்னழுத்தக் கலங்களின் உற்பத்தித் திறனில் கிட்டத்தட்ட 57% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்