TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் – தமிழ்நாடு

February 5 , 2026 5 days 112 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இரண்டு பத்ம பூஷன் மற்றும் 11 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • S.K.M. மயிலானந்தன் சமூக சேவைக்காக பத்ம பூஷண் விருதையும், K.R. பழனிசாமி மருத்துவத் துறையில் ஆற்றிய உயரிய சேவைக்காகவும் இந்த விருதைப் பெறுகின்றனர்.
  • மயிலானந்தன் ஈரோட்டைச் சேர்ந்த எஸ்.கே.எம் குழும நிறுவனங்களின் நிர்வாகத் தலைவர் ஆவார்.
  • அதிமுக நிறுவனர் எம்.ஜி. ராமச்சந்திரனின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த எச்.வி. ஹண்டேவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
  • கர்நாடக இசைக் கலைஞர்கள் மற்றும் சகோதரிகளான ரஞ்சனி-காயத்ரி இணையர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் புண்ணியமூர்த்தி நடேசன், மருத்துவத் துறையில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • பத்மஸ்ரீ விருதுக்கு சிற்பி ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ஐஐடி-மெட்ராஸ் இயக்குநர் வி.காமகோடி, அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக கே.ராமசாமி, கலைக்காக ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், கலைக்காக திருவாரூர் பக்தவத்சலம் மற்றும் இலக்கியம் மற்றும் கல்விக்காக எழுத்தாளர் சிவசங்கரி ஆகியார் இதர பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்