2026 ஆம் ஆண்டு குவாண்டம் உயிரி தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு
September 4 , 2026 9 days 68 0
உயிரி அறிவியல் மற்றும் சுகாதாரத் துறையில் குவாண்டம் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளை ஊக்குவிப்பதற்காக மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) 2026 ஆம் ஆண்டு குவாண்டம் உயிரி தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது.
இது நோயறிதல், உயிரிமருத்துவப் படமாக்கல், மருந்து கண்டுபிடிப்பு, துல்லிய மருத்துவம் மற்றும் உயிரிஉணர்தல் ஆகியவற்றில் உள்ள பயன்பாடுகளில் கவனம் செலுத்தியது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) ஆதரவுடன் தேசிய குவாண்டம் திட்டத்தின் (NQM) கீழ் குவாண்டம் உணர்தல் மற்றும் அளவியலுக்கான மையமாக ஐஐடி மும்பையில் உள்ள QMet டெக் அறக்கட்டளை செயல்படுகிறது.
குவாண்டம் உயிரியல், குவாண்டம் உயிரி உணர்விகள் மற்றும் உயிரிஉணர்தல் தொழில்நுட்பங்களை ஆய்வகங்களில் இருந்து தொழில்துறைக்கு மாற்றுவது ஆகியவை முக்கிய விவாதங்களில் அடங்கும்.