2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட வேட்பாளர்களில் சுமார் 83% பேர் தங்கள் தேர்தல் வைப்புத்தொகையை இழந்தனர்.
தேர்தல் வைப்புத் தொகை என்பது தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் செலுத்தப்படும் தொகையாகும்.
ஒரு தொகுதியில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு (1/6) வாக்குகளை விட குறைவாகப் பெறும் வேட்பாளரின் வைப்புத்தொகை பறிமுதல் செய்யப் படும்.
வைப்புத்தொகையை இழந்த வேட்பாளர்களின் சதவீதத்தில் தமிழ்நாடு மாநிலம் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் (78%) இரண்டாமிடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 4,023 வேட்பாளர்களில் 3,352 பேர் வைப்புத்தொகையை இழந்தனர்.
மேற்கு வங்கத்தில் போட்டியிட்ட 2,920 வேட்பாளர்களில் 2,298 பேர் வைப்புத் தொகையை இழந்தனர்.