2026 ஆம் ஆண்டு பிரிக்ஸ் இளைஞர் ஆற்றல் உச்சி மாநாடு
August 23 , 2026 71 days 217 0
8-வது பிரிக்ஸ் இளைஞர் ஆற்றல் உச்சி மாநாட்டை இந்தியா தனது பிரிக்ஸ் தலைமையின் கீழ் காணொளி வாயிலாக தொகுத்து வழங்கியது.
இந்த உச்சி மாநாடு ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை, ஆற்றல் அணுகல் மற்றும் சமத்துவம், மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
இதன் கருத்துரு Energy for All என்பதாகும்; இந்தியாவின் பரந்த பிரிக்ஸ் தலைமையின் கருத்துரு “Building for Resilience, Innovation, Cooperation and Sustainability” என்பதாகும்.
ஆற்றல் பல்வகைப்படுத்தல், நெகிழ்வான விநியோகச் சங்கிலிகள், புதுமையான நிதியளிப்பு மற்றும் ஆற்றல் அமைப்புகளின் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை குறித்த விவாதங்கள் இடம் பெற்றன.
இந்த உச்சி மாநாட்டைத் தொடர்ந்து குஜராத்தின் காந்திநகரில் பிரிக்ஸ் இளைஞர் சபைக் கூட்டம் மற்றும் இளைஞர் உச்சி மாநாடு நடைபெற்றது.