2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் புவியிடக் குறியிடல்
September 15 , 2025 40 days 92 0
2026 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட திட்டமிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப் பட்டியலிடல் நடவடிக்கைகளின் (HLO) போது புவிசார் குறியிடல் நடத்தப்படும்.
கணக்கெடுப்பாளர்கள் திறன் பேசிகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு கட்டிடத்தின் சரியான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை ஆயத் தொலைவுகளைப் புவியியல் தகவல் அமைப்பு (GIS) வரைபடத்தில் குறிப்பார்கள்.
ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு தனித்துவமான புவிசார் குறியீடு ஒதுக்கப் படும் என்ற நிலையில் இது டிஜிட்டல் வரைபடங்களில் துல்லியமான இருப்பிட அடையாளத்தை வழங்கும்.
வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் வீடுகள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், கட்டிடங்கள் ஆனது குடியிருப்பு, குடியிருப்பு சாராதது, பகுதியளவிலான குடியிருப்புப் பகுதி அல்லது முக்கிய அடையாளப் பகுதியாக வகைப்படுத்தப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாடு தழுவிய அளவில் புவிசார் குறியிடல் பயன்படுத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்; முந்தைய நடவடிக்கைகள் வீடுகளின் பட்டியலிடலுக்காக நேரடியாக வரையப்பட்ட வரைபடங்களை சார்ந்திருந்தன.
கடைசியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் (2011) 330.84 மில்லியன் வீடுகள் பதிவு செய்யப்பட்டது என்ற நிலையில் அவற்றில் 306.16 மில்லியன் வீடுகள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன.