TNPSC Thervupettagam

2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மின்னணு ஏற்றுமதி

August 12 , 2025 3 days 59 0
  • 2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி ஆண்டிற்கு 47 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.
  • மொத்த ஏற்றுமதி மதிப்பு 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பதிவான 8.43 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 12.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
  • 4.9 பில்லியன் டாலர்களாக இருந்த கைபேசி ஏற்றுமதியானது, 55 சதவீதம் அதிகரித்து 7.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
  • 3.53 பில்லியன் டாலர்களாக இருந்த கைபேசி சாராத மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதிகள் 37 சதவீதம் அதிகரித்து 4.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
  • 2024 ஆம் நிதியாண்டில் 29.1 பில்லியன் டாலர்களாக இருந்த மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி 2025 ஆம் நிதியாண்டில் 38.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
  • இந்திய கைபேசி மற்றும் மின்னணுவியல் சங்கம் (ICEA) ஆனது 2026 ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் ஏற்றுமதியானது 46 முதல் 50 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கிறது.
  • இந்தியாவில் 2015 ஆம் நிதியாண்டில் 31 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த மின்னணு உற்பத்தியானது 2025 ஆம் நிதியாண்டில் 133 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்