2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மூலதனச் செலவினம்
August 16 , 2025 15 hrs 0 min 25 0
தமிழ்நாட்டின் மூலதனச் செலவினமானது, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் சுமார் 18 சதவீதம் குறைந்து 4155.74 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் இது 5041.90 கோடி ரூபாயாக இருந்தது.
சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகள் போன்ற சொத்துக்களை உருவாக்குதல் மூலதனச் செலவில் அடங்கும்.
2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த மாநில மூலதனச் செலவினம் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம் 267 சதவீதத்துடன் மிக அதிக வளர்ச்சியைக் கண்டது, அதைத் தொடர்ந்து ஹரியானா 103 சதவீதமும் குஜராத் 65 சதவீதமும் கொண்டுள்ளன.
மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்துடன் சேர்ந்து, தமிழ்நாடு 28 சதவீத சரிவையும், தெலுங்கானா 22 சதவீத சரிவையும் கண்டது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் 37605.43 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் ஆனது 14.5 சதவீதம் உயர்ந்து 43070.45 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
இதே காலக் கட்டத்தில் 83636.73 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் வருவாய் செலவினம் ஆனது 79054.68 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.