TNPSC Thervupettagam
October 4 , 2026 2 days 72 0
  • அசாதாரண அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக 2026 ஆம் ஆண்டிற்கான Ig நோபல் பரிசுகள் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் வழங்கப்பட்டன.
  • நோபல் பரிசுகளுக்கு நகைச்சுவையான இணையாக Ig நோபல் பரிசுகள் 1991 ஆம் ஆண்டில் மார்க் ஆபிரகாம்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டன.
  • மூக்கைச் சிந்துவதின் காற்றியக்கவியல் மற்றும் அதன் ஆரோக்கிய விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்ததற்காக டோகுஜி உன்னோவிற்கு (இறப்பிற்குப் பின்) மருத்துவப் பிரிவிற்கான பரிசு வழங்கப்பட்டது.
  • விஷப் பாம்புகள் மனிதர்களைக் கடிக்கச் செய்யும் காரணிகளைப் பற்றி ஆய்வு செய்ததற்காக ஜோவாவோ மிகுவல் ஆல்வ்ஸ்-நூன்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு உயிரியல் பிரிவிற்கான பரிசு வழங்கப்பட்டது.
  • குட்டி போடும் கரப்பான் பூச்சிகளின் அதிக ஆற்றல் கொண்ட பால் புரதங்களை ஆய்வு செய்ததற்காக, இந்திய ஆராய்ச்சியாளர்கள் உட்பட சஞ்சாரி பானர்ஜி, நாதன் கௌசென்ஸ் மற்றும் சக ஊழியர்களுக்கு வேதியியல் பிரிவிற்கான பரிசு வழங்கப் பட்டது.
  • பொருளாதாரம், இயற்பியல், தொழில்நுட்பம், நுகர்தல், அமைதி மற்றும் மண் அறிவியல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளைப் பிற பரிசுகள் அங்கீகரித்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்