ரைபிள், பிஸ்டல் மற்றும் ஷாட்கன் நிகழ்வுகளில் நான்கு பதக்கங்களுடன் (1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள்) சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பின் (ISSF) 2026 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பைப் பயணத்தை இந்தியா நிறைவு செய்துள்ளது.
2026 ISSF உலகக் கோப்பையில் அதிகப் பதக்கங்களை வென்று சீனா பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
மகளிர் 25மீ பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் தங்கம் வென்றார்.
மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சன்யம் விஜ் வெள்ளிப் பதக்கமும், மகளிர் 25மீ பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
10மீ ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் சோனம் மஸ்கர் மற்றும் ஹிமான்ஷு தில்லான் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.