TNPSC Thervupettagam

2026 UPSC குடிமைப் பணி தேர்வில் முக்கிய மாற்றங்கள்

February 8 , 2026 9 days 82 0
  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) 2026 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வு அறிவிப்பு, தேர்வில் 14 முக்கிய மாற்றங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • பணிநாடுநர் கணக்கு உருவாக்குதல், பொதுப் பதிவு எண் (URN), பொது விண்ணப்பப் படிவம் (CAF) மற்றும் தேர்வுக்கான பிரத்தியேகத் தொகுதி உள்ளிட்ட நான்கு கட்ட இணையவழி விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நிகழ்நேர புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்ற வேண்டும், ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும் என்பதோடு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு எந்தத் திருத்தமும் அல்லது திரும்பப் பெறுதலும் அனுமதிக்கப் படாது.
  • தேர்வு மையங்களில் கட்டாய முக அங்கீகாரம், இணையவழி அனுமதிச் சீட்டுகள், மற்றும் IAS, IFS,மற்றும் IPS தேர்வர்களுக்கான சேவைத் தகுதி மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • குறைக்கப்பட்ட வினாத்தாள் பிரதிநிதித்துவ சாளரம், PwBD விண்ணப்ப தாரர்களுக்கான மைய ஒதுக்கீடு விதிகள் மற்றும் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுக்குப் பிறகு கட்டாய உள்நுழைவு ஆகியவை பிற மாற்றங்களில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்