2026 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை - மேக்ஸிங் (Maxxing)
October 30 , 2026 8 days 88 0
வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களை மேம்படுத்துவதற்கான வளர்ந்து வரும் இணையப் போக்கைப் பிரதிபலிக்கும் வகையில், Dictionary.com தனது 2026 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக "மேக்ஸிங்" (Maxxing) என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளது.
"மேக்ஸிங்" என்பது ஒரு விஷயத்தை முழுமையாக அல்லது அதிகபட்சமாகச் செய்வதைக் குறிக்கிறதுடன் இது ஜெனரேஷன் Z (Gen Z) மற்றும் ஜெனரேஷன் ஆல்பா (Gen Alpha) தலைமுறையினரிடையே பிரபலமாகியுள்ளது.
டிக்சனரி.காம் பகுப்பாய்வு செய்த ஊடகங்களில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே "லுக்ஸ்மேக்ஸிங்" (Looksmaxxing) என்ற வார்த்தையின் பயன்பாடு 1,000%-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
Affordability, Data Center, Unc மற்றும் Odyssey ஆகியவை இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த பிற வார்த்தைகளாகும்; 2025 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக "67" தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது.