TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டிற்கான RCA - இந்தியா

May 24 , 2026 16 hrs 0 min 44 0
  • சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான பிராந்திய கூட்டுறவு ஒப்பந்தத்தின் (RCA) தலைவர் பதவியை இந்தியா ஏற்றுள்ளது.
  • மகாராஷ்டிராவின் நவி மும்பையில் நடைபெற்ற தேசியப் பிரதிநிதிகளின் 48-வது கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அமைதியான பயன்பாட்டை RCA ஊக்குவிக்கிறது.
  • சுகாதாரம், விவசாயம் மற்றும் ஆற்றல் ஆகிய துறைகளில் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் ஆதரிக்கிறது.
  • 1972 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த RCA-வில் இந்தியா ஒரு நிறுவன உறுப்பினர் ஆகும் என்ற நிலையில் தற்போது இதில் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 22 உறுப்பு நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்