TNPSC Thervupettagam

2026-ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது – வைரமுத்து

March 16 , 2026 14 hrs 0 min 39 0
  • வைரமுத்து 2026-ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருதைப் பெற்றார் இதன் மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உயரிய கௌரவத்தைப் பெறும் மூன்றாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
  • இதற்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த அகிலன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
  • வைரமுத்து, 2003-ஆம் ஆண்டில் தனது 'கள்ளிக்காட்டு இதிகாசம்' புதினத்திற்காக சாகித்ய அகாதமி விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஞானபீட விருது இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிக உயரிய இலக்கிய விருது ஆகும்.
  • இது 1944 ஆம் ஆண்டில் சாஹு சாந்தி பிரசாத் ஜெயின் என்பவரால் தொடங்கப்பட்ட 'பாரதிய ஞானபீட' அமைப்பால் 1961 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களுக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.
  • தகுதியுள்ள 23 மொழிகளில், இதுவரை 16 மொழிகளில் உள்ள படைப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்