2026 ஆம் ஆண்டிற்குள் 2வது பெரிய சூரியசக்தி உற்பத்தியாளர் நாடு
April 11 , 2023 773 days 337 0
இந்தியா, சூரிய சக்தி உற்பத்தியில் தன்னிறைவுப் பெற உள்ளதோடு, மேலும், 2026 ஆம் ஆண்டில் ஒளி மின்னழுத்தக் கலங்களின் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நாடாக விளங்கும்.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 18GW ஆக இருந்த, இந்தியாவின் ஒட்டுமொத்த அதிக பட்சத் தொகுதி உற்பத்தித் திறனானது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3 8GW ஆக உயர்ந்து இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இனிமேல் நிறுவப்பட உள்ள ஒளி மின்னழுத்தக் கலங்களின் உற்பத்தி நிறுவல்களின் அடிப்படையில், குஜராத் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உள்ளது.
இது இனிமேல் நிறுவப்பட உள்ள அனைத்து ஒளி மின்னழுத்தக் கலங்களின் உற்பத்தித் திறனில் கிட்டத்தட்ட 57% ஆகும்.