TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் புவியிடக் குறியிடல்

September 15 , 2025 7 days 72 0
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட திட்டமிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப் பட்டியலிடல் நடவடிக்கைகளின் (HLO) போது புவிசார் குறியிடல் நடத்தப்படும்.
  • கணக்கெடுப்பாளர்கள் திறன் பேசிகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு கட்டிடத்தின் சரியான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை ஆயத் தொலைவுகளைப் புவியியல் தகவல் அமைப்பு (GIS) வரைபடத்தில் குறிப்பார்கள்.
  • ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு தனித்துவமான புவிசார் குறியீடு ஒதுக்கப் படும் என்ற நிலையில் இது டிஜிட்டல் வரைபடங்களில் துல்லியமான இருப்பிட அடையாளத்தை வழங்கும்.
  • வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் வீடுகள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், கட்டிடங்கள் ஆனது குடியிருப்பு, குடியிருப்பு சாராதது, பகுதியளவிலான குடியிருப்புப் பகுதி அல்லது முக்கிய அடையாளப் பகுதியாக வகைப்படுத்தப்படும்.
  • மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாடு தழுவிய அளவில் புவிசார் குறியிடல் பயன்படுத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்; முந்தைய நடவடிக்கைகள் வீடுகளின் பட்டியலிடலுக்காக நேரடியாக வரையப்பட்ட வரைபடங்களை சார்ந்திருந்தன.
  • கடைசியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் (2011) 330.84 மில்லியன் வீடுகள் பதிவு செய்யப்பட்டது என்ற நிலையில் அவற்றில் 306.16 மில்லியன் வீடுகள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்