2026 ஆம் ஆண்டுக்கான ஐ.நா. ‘கௌரவப் பட்டியலில்’ இந்தியா
February 10 , 2026 126 days 185 0
இந்தியா 2026 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) வழக்கமான வரவு செலவுத் திட்டத்திற்கு 35.18 மில்லியன் டாலர் தொகையைச் செலுத்தியுள்ளது.
இதன் மூலம், தங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்திய 51 ஐ.நா. உறுப்பு நாடுகளின் 'கௌரவப் பட்டியலில்' இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2026 ஆம் ஆண்டிற்கான 3.45 பில்லியன் டாலர் வழக்கமான வரவுசெலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கமான வரவு செலவுத் திட்டம், பொதுச் சபை, பாதுகாப்புச் சபை, செயலகம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகச் செலவுகளை உள்ளடக்கியது.
உறுப்பு நாடுகளின் பங்களிப்புகள், பொருளாதார அளவு, தனிநபர் வருமானம், வெளிநாட்டுக் கடன் மற்றும் மேம்பாட்டு நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
இரண்டு வருடங்களுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டிய நாடுகள், அந்தப் பணம் செலுத்தப்படும் வரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கின்றன.