TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டுக்கான மாதிரி நடத்தை விதிகள்

March 17 , 2026 13 hrs 0 min 49 0
  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அட்டவணை மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது
  • தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்று மாலையில் தமிழகத்தில் மாதிரி நடத்தை விதிகள் (MCC) அமலுக்கு வந்தன.
  • தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை வழி நடத்த தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட விதிகளின் தொகுப்பே மாதிரி நடத்தை விதிகள் (MCC) ஆகும்.
  • இது அரசியலமைப்பின் சரத்து 324 இன் படி, நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை மேற்பார்வையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
  • பொது நடத்தை விதிகள், கூட்டங்கள், ஊர்வலங்கள், அதிகாரத்தில் உள்ள கட்சி, வாக்குச் சாவடி, வாக்குச் சாவடி நாள் மற்றும் தேர்தல் அறிக்கைகள் ஆகியவற்றைக் கையாளும் ஏழு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

மாதிரி நடத்தை விதிகளின் தாக்கம்

  • இது அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கும் பொருந்தும்.
  • வங்கிகளில் ₹1 லட்சத்திற்கு மேல் அசாதாரணமான மற்றும் சந்தேகத்திற்கிடமான பணம் திரும்பப் பெறுதல் அல்லது பணம் செலுத்துதல் செய்வது குறித்த தகவல்களை உரிய சரிபார்ப்புக்காகப் பெற மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் (DEOக்கள்) அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • ஆளும் அரசு புதிய திட்டங்களை அனுமதிக்கவோ, நிதி மானியங்களை அறிவிக்கவோ, அரசியல் பிரச்சாரங்களுக்கு அரசு வாகனங்கள்/ஊழியர்களைப் பயன்படுத்தவோ முடியாது.
  • வாக்களிப்பு நிலையங்களிலிருந்து 100 மீட்டருக்குள் எந்த பிரச்சாரமும் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
  • வாக்களிப்பு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் தடை செய்யப் பட்டுள்ளன.
  • பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் சட்டவிரோதப் பயன்பாடு அல்லது வாக்காளர் போக்குவரத்து தண்டிக்கப்படும்.
  • நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளூர் காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதோடு, அதற்கான வழிகள், நேரம் மற்றும் நியமிக்கப்பட்ட இடங்களை பாரபட்சமின்றி பயன்படுத்த வேண்டும்.
  • வேட்பாளர்களும் கட்சிகளும் மோதலை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்க்க வேண்டும், அதாவது மற்ற கட்சிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அல்லது எதிரிகளின் வீடுகளில் போராட்டங்களை நடத்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  • மதம், சாதி அல்லது வகுப்புவாத உணர்வுகளுக்கு தேர்தலில் அனுமதி இல்லை.
  • தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யாமல், கொள்கைகள், செயல்திறன் மற்றும் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வெகுஜன ஊடகங்களை ஆளும் கட்சிக்கு ஆதரவான பக்கச் சார்பான செய்திகளுக்குப் பயன்படுத்த முடியாது.
  • லஞ்சம் கொடுப்பது, மிரட்டுவது, ஆள்மாறாட்டம் செய்வது அல்லது வாக்குச் சாவடிகளுக்கு அருகில் பிரச்சாரம் செய்வது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் தடை செய்யப் பட்டுள்ளன.
  • தனியார் வீடுகளுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் அல்லது பிரச்சாரத்திற்காக வேறொருவரின் சொத்தைப் பயன்படுத்துவது தடை செய்யப் பட்டுள்ளது.
  • கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்; ஒலிபெருக்கிகள் அல்லது கூட்டங்களுக்கான அனுமதிகளைப் பெற வேண்டும்.
  • அமைதியைப் பேணவும் போக்குவரத்தை நிர்வகிக்கவும் காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
  • ஊர்வலங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதைகள், நேரங்கள் மற்றும் தொடக்க/முடிவு இடங்களில் செல்ல வேண்டும்.
  • தீங்கு விளைவிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது அல்லது உருவ பொம்மைகளை எரிப்பது தடை செய்யப் பட்டுள்ளது.
  • கட்சிகள் மற்ற ஊர்வலங்களுடன் மோதல்களைத் தவிர்க்க வேண்டும்.
  • வாக்குப்பதிவின் போது கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தல் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும்.
  • வாக்குச் சாவடிகளுக்கு அருகில் பிரச்சாரம், மதுபானம் அல்லது கூட்டம் கூடாது; வாக்குச் சாவடி முகாம்கள் எளிமையாகவும் அரசியல் சின்னங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • அரசாங்கங்கள் தங்கள் பிரச்சாரத்திற்கு வேண்டி அதிகாரப்பூர்வ இயந்திரங்கள், அரசு நிதிகள் அல்லது பதவிகளைப் பயன்படுத்தக் கூடாது.
  • வாக்காளர்களைப் பாதிக்கக்கூடிய நிதி மானியங்கள், புதிய திட்டங்கள், உள்கட்டமைப்பு வாக்குறுதிகள் அல்லது தற்காலிக நியமனங்கள் பற்றிய அறிவிப்புகள் எதுவும் கூடாது.
  • போக்குவரத்து, ஓய்வு இல்லங்கள், பங்களாக்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட அரசு வசதிகள் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.
  • தேர்தல் அறிக்கைகள் அரசியலமைப்பு கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும், யதார்த்தமாக இருக்க வேண்டும், மேலும் வாக்குப் பதிவுக்கு முன் தடைசெய்யப்பட்ட காலத்தில் அவை வெளியிடப்படக் கூடாது.

பின்னணி

  • மாதிரி நடத்தை விதிகளின் ஆரம்பம் 1960 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தல்களில் தொடங்கியது என்பதோடு அப்போது அம்மாநில நிர்வாகம் அரசியல் கட்சிகளுக்கான 'நடத்தை விதிகளை' உருவாக்கியது.
  • 1962 மக்களவைக்கான பொதுத் தேர்தலில், MCC என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டது.
  • 1962 தேர்தல்களில் MCC பெரும்பாலும் அனைத்து கட்சிகளாலும் பின்பற்றப்பட்டதுடன் மேலும் அடுத்தடுத்த பொதுத் தேர்தல்களிலும் அது தொடர்ந்து பின்பற்றப்பட்டது.
  • 1979 ஆம் ஆண்டில், 'அதிகாரத்தில் உள்ள கட்சியை' ஒழுங்குபடுத்தவும், தேர்தல் நேரத்தில் அது நியாயமற்ற நன்மையைப் பெறுவதைத் தடுக்கவும் தேர்தல் ஆணையம் அதில் மேலும் ஒரு பிரிவைச் சேர்த்தது.
  • 1991 ஆம் ஆண்டில், தேர்தல் விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறுதல் மற்றும் தொடர்ச்சியான ஊழல்களைத் தொடர்ந்து, மாதிரி நடத்தை விதிகளை இன்னும் கடுமையாகப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
  • 2013 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் தேர்தல் அறிக்கைகள் தொடர்பான வழிகாட்டுதல்களைச் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது என்ற நிலையில் இது 2014 பொதுத் தேர்தல்களுக்கான MCC இல் சேர்க்கப்பட்டது.
  • MCC விதிமுறைகளை சட்டத்தால் செயல்படுத்தப்பட முடியாது.
  • இருப்பினும், MCC இன் சில விதிகள், இந்திய தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 போன்ற பிற சட்டங்களில் தொடர்புடைய விதிகளைப் பயன்படுத்திச் செயல்படுத்தப்படலாம்.
  • MCC விதிமுறைகளைச் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படுவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் வாதிட்டது; ஏனெனில் தேர்தல்கள் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் (கிட்டத்தட்ட 45 நாட்களுக்குள்) முடிக்கப்பட வேண்டும் என்றும், நீதித்துறை நடவடிக்கைகள் பொதுவாக அதிக நேரம் எடுக்கும் என்றும் கூறுகிறது, எனவே அதை சட்டத்தால் அமல்படுத்துவது சாத்தியமில்லை.
  • MCC பொது நடத்தை, கூட்டங்கள், ஊர்வலங்கள், வாக்குச் சாவடிகள், பார்வையாளர்கள், அதிகாரத்தில் உள்ள கட்சி மற்றும் தேர்தல் அறிக்கைகள் ஆகியவற்றைக் கையாளும் எட்டு விதிகளைக் கொண்டுள்ளது.
  • MCC இன் முக்கிய விதிகள் கீழே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
  • பொது நடத்தை: அரசியல் கட்சிகளை விமர்சிப்பது அவர்களின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், கடந்த காலப் பதிவுகள் மற்றும் பணிகள் ஆகியவற்றுடன் மட்டுமே இருக்க வேண்டும்.
  • (அ) வாக்குகளைப் பெற சாதி மற்றும் வகுப்புவாத உணர்வுகளைப் பயன்படுத்துதல், (ஆ) சரி பார்க்கப்படாத அறிக்கைகளின் அடிப்படையில் வேட்பாளர்களை விமர்சித்தல், (இ) வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல் அல்லது மிரட்டுதல், மற்றும் (ஈ) அவர்களின் கருத்துகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்க நபர்களின் வீடுகளுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் அல்லது மறியல்களை ஏற்பாடு செய்தல் ஆகியவை தடை செய்யப் பட்டுள்ளன.
  • கூட்டங்கள்: காவல்துறை போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய ஏதுவாக, கட்சிகள் எந்தவொரு கூட்டத்தின் இடம் மற்றும் நேரத்தையும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் தெரிவிக்க வேண்டும்.
  • ஊர்வலங்கள்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே பாதையில் ஊர்வலங்களைத் திட்டமிட்டால், ஊர்வலங்கள் மோதாமல் இருப்பதை உறுதி செய்ய ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே தொடர்பு கொள்ள வேண்டும். பிற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உருவப் பொம்மைகளை எடுத்துச் சென்று எரிப்பது அனுமதிக்கப்படாது.
  • வாக்களிப்பு நாள்: வாக்குச் சாவடிகளில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஊழியர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும். இவற்றில் வேட்பாளரின் கட்சி பெயர், சின்னம் அல்லது பெயர் இருக்கக் கூடாது.
  • வாக்குச் சாவடிகள்: வாக்காளர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திடமிருந்து செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே வாக்குச் சாவடிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
  • பார்வையாளர்கள்: தேர்தல் நடத்தை தொடர்பான பிரச்சனைகளை வேட்பாளர்கள் தெரிவிக்கக் கூடிய வகையில் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமிக்கும்.
  • அதிகாரத்தில் உள்ள கட்சி: MCC என்பது 1979 ஆம் ஆண்டில் சில கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது, இது அதிகாரத்தில் உள்ள கட்சியின் நடத்தையை ஒழுங்குபடுத்துகிறது. அமைச்சர்கள் அதிகாரப்பூர்வ வருகைகளை தேர்தல் பணிகளுடன் இணைக்கவோ அல்லது அதற்காக அதிகாரப்பூர்வ இயந்திரங்களைப் பயன்படுத்தவோ கூடாது. தேர்தல்களில் வெற்றிக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக பொது கருவூலத்தின் செலவில் விளம்பரப்படுத்துவதையோ அல்லது சாதனைகள் குறித்த விளம்பரத்திற்காக அதிகாரப்பூர்வ வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்துவதையோ கட்சி தவிர்க்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் எந்த நிதி மானியங்களையும் அறிவிக்கக் கூடாது, அல்லது சாலைகள் கட்டுவது, குடிநீர் வழங்குவது போன்றவற்றை உறுதியளிக்கக் கூடாது. பிற கட்சிகள் பொது இடங்கள் மற்றும் ஓய்வு இல்லங்களைப் பயன்படுத்த அனும

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்