2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மின்னணு ஏற்றுமதி
August 12 , 2025 3 days 58 0
2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி ஆண்டிற்கு 47 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.
மொத்த ஏற்றுமதி மதிப்பு 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பதிவான 8.43 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 12.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
4.9 பில்லியன் டாலர்களாக இருந்த கைபேசி ஏற்றுமதியானது, 55 சதவீதம் அதிகரித்து 7.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
3.53 பில்லியன் டாலர்களாக இருந்த கைபேசி சாராத மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதிகள் 37 சதவீதம் அதிகரித்து 4.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
2024 ஆம் நிதியாண்டில் 29.1 பில்லியன் டாலர்களாக இருந்த மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி 2025 ஆம் நிதியாண்டில் 38.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
இந்திய கைபேசி மற்றும் மின்னணுவியல் சங்கம் (ICEA) ஆனது 2026 ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் ஏற்றுமதியானது 46 முதல் 50 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கிறது.
இந்தியாவில் 2015 ஆம் நிதியாண்டில் 31 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த மின்னணு உற்பத்தியானது 2025 ஆம் நிதியாண்டில் 133 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.