TNPSC Thervupettagam

2026 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் முதலீடுகள்

January 6 , 2026 2 days 59 0
  • முதல் ஒன்பது மாதங்களில் முன்மொழியப்பட்ட மொத்த முதலீடுகளில் சுமார் 25.3 சதவீதத்தினைப் பெற்று, 2026 ஆம் நிதியாண்டில் ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் சிறந்த முதலீட்டு இடமாக உருவெடுத்துள்ளது.
  • இதில் 13.1% பங்குடன் ஒடிசா இரண்டாவது இடத்திலும், 12.8% பங்குடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் இருப்பதாக பாங்க் ஆஃப் பரோடா அறிக்கை தெரிவித்துள்ளது.
  • ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை நாட்டின் மொத்த முன் மொழியப் பட்ட முதலீடுகளில் 51.2% பங்கினைக் கொண்டுள்ளன.
  • 2026 ஆம் நிதியாண்டில் மொத்த முதலீட்டு அறிவிப்புகள் ஆண்டிற்கு 11.5% அதிகரித்து 26.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • தெலுங்கானா (9.5%), குஜராத் (7.1%), மற்றும் தமிழ்நாடு (4.9%) ஆகியவை பிற முக்கியப் பங்களிப்பாளர்களாக இருந்தன அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம் (2.7%) மற்றும் கர்நாடகா (2.1%) ஆகியவை குறைந்த பங்குகளைக் கொண்டிருந்தன.
  • தொழில்துறை முதலீட்டு நடவடிக்கைகள் கிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாக இதில் தரவுகள் காட்டுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்