TNPSC Thervupettagam

2026 தேர்தல்கள்

March 17 , 2026 13 hrs 0 min 21 0
  • இந்திய தேர்தல் ஆணையம், அசாம், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாகவும் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
  • இந்த நான்கு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் கனடாவின் மக்கள்தொகைக்குச் சமம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
  • நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு ஒன்றியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலில் 824 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் பங்கேற்க தகுதியுடையவர்கள்.
  • வாக்களிப்புச் செயல்பாட்டின் போது வெளிப்படைத்தன்மையைப் பராமரிக்க, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 100% இணைய ஒளிபரப்பை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்