2026ல் இந்தியாவின் மிகப்பெரிய எல்பிஜி (LPG) விநியோகஸ்தர்
August 16 , 2026 2 days 34 0
2026ம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய எல்பிஜி (LPG) விநியோகஸ்தராக அமெரிக்கா திகழும்.
இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் 67 சதவீதப் பங்களிப்பை அமெரிக்கா கொண்டு உள்ளது.
ஆற்றல் விநியோக ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவின் எல்பிஜி தேவையில் சுமார் 10 சதவீதத்தை அமெரிக்காவிலிருந்து பெறுவது என்ற அரசின் முந்தைய முடிவை அடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா தனது சிலிண்டர் அடைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் எரிவாயு (எல்பிஜி) தேவையில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வந்தது; இதில் சுமார் 90 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே வந்தது.
வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி குறைந்துள்ளதை ஈடுசெய்யும் வகையில், இந்தியா தனது உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியையும் அதிகரித்துள்ளது.
மேலும், கச்சா எண்ணெய் விநியோகத்திற்கான நாடுகளின் எண்ணிக்கையை 27-லிருந்து 41-ஆக இந்தியா விரிவுபடுத்தியுள்ளது.
ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வை ஊக்குவிக்கும் நோக்கில், 84,000 கோடி ரூபாய் மதிப்பிலான 'சமுத்ரா மந்தன்' திட்டத்திற்கும் அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.