TNPSC Thervupettagam

2026–31 ஆம் ஆண்டிற்கான அறிக்கை சமர்ப்பிப்பு - 16வது நிதி ஆணையம்

November 21 , 2025 16 hrs 0 min 19 0
  • பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16வது நிதி ஆணையம் ஆனது, இந்தியக் குடியரசுத் தலைவரிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
  • மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் வரி பங்கீட்டிற்கான அடிப்படையை இந்த நிதி ஆணையம் பரிந்துரைக்கிறது.
  • இந்த அறிக்கை 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் 2031 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையிலான 5 ஆண்டுகளை உள்ளடக்கியது.
  • 16வது நிதி ஆணையத்திற்கான பணிக் காலத்தை 2024 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதியன்று மத்திய அமைச்சரவை அங்கீகரித்தது.
  • அங்கீகரிக்கப்பட்ட அட்டவணையின்படி, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
  • பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளுக்கான மானிய உதவி மற்றும் நிதி ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கான கொள்கைகளை பரிந்துரைப்பதும் இந்த ஆணையத்திற்கு பணிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்