TNPSC Thervupettagam

2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மாற்றுத்திறனாளிகள் பிரிவுகள்

August 23 , 2026 5 hrs 0 min 34 0
  • 2016 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (RPwD) சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப் பட்ட அனைத்து 21 குறைபாடுகளையும் தனித்தனியாக பதிவு செய்வதற்குப் பதிலாக, 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாத்தாள் 9 பரந்த குறைபாடு வகைகளை மட்டுமே முன்மொழிகிறது என்று மாற்றுத் திறனாளிகள் உரிமை குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன.
  • பார்வை, செவித்திறன், பேச்சு, இயக்கம், அறிவுசார் குறைபாடு, மனநல பாதிப்பு, அமிலத் தாக்குதல், நாள்பட்ட நரம்பியல் நோய் மற்றும் இரத்தக் கோளாறு ஆகியவை முன்மொழியப்பட்ட வகைகளில் அடங்கும்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பானது ஆறு குறைபாடு வகைகளின் அடிப்படையில் இந்தியாவின் மக்கள் தொகையில் 2.21% ஆக உள்ள 2.68 கோடி மாற்றுத் திறனாளிகளைப் பதிவு செய்தது.
  • 2016 ஆம் ஆண்டின் RPwD சட்டமானது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, குள்ளத்தன்மை மற்றும் பல குறைபாடுகள் உட்பட அங்கீகரிக்கப் பட்ட குறைபாடுகளை 7-இல் இருந்து 21 ஆக விரிவுபடுத்தியது.
  • இந்த ஒன்பது வகைகளும் குறிப்பிட்ட குறைபாடுகளை உள்ளடக்கிய பரந்த குழுக்கள் என்றும், தீவிரத்தின் அடிப்படையில் மூன்று குறைபாடுகள் வரை பதிவு செய்ய வினாத் தாள் அனுமதிக்கிறது என்றும் இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகம் (ORGI) தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்