TNPSC Thervupettagam

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மாற்றங்கள்

August 27 , 2026 16 hrs 0 min 3 0
  • 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதன்முறையாக பிச்சைக் காரர்கள் மற்றும் நாடோடிகள் தனிப் பிரிவாகப் பதிவு செய்யப்பட மாட்டார்கள்.
  • அதற்குப் பதிலாக அவர்கள் பொருளாதாரம் அல்லாத செயல்பாட்டுப் பிரிவில் "மற்றவர்கள்" என்பதன் கீழ் சேர்க்கப்படுவார்கள்.
  • 2001 ஆம் ஆண்டில் 6.3 லட்சமாகவும், 1991 ஆம் ஆண்டில் 5.4 லட்சமாகவும் இருந்த நிலையில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 3.8 லட்சம் பேர் மட்டுமே பிச்சைக்காரர்கள் அல்லது நாடோடிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
  • 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெயர்வுக்கு ஒரு காரணமாக இயற்கை பேரிடர்களையும் சேர்க்கும்.
  • பெற்றோர்கள் ஒரே வீட்டில் பட்டியலிடப்படாத நிலையில் அல்லது உயிருடன் இல்லாத போது அவர்களின் பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் மதம் ஆகியவற்றை புதிய புலங்கள் சேகரிக்கும்.
  • கிடைக்கும் இடங்களில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் / கடவுச்சீட்டு எண்கள் போன்ற விவரங்களும் சேகரிக்கப்படலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்