TNPSC Thervupettagam

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: 40 கேள்விகள்

August 17 , 2026 16 hrs 0 min 17 0
  • சாதி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குகள் மற்றும் பிற விவரங்கள் உட்பட 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்திற்கான 40 கேள்விகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, பட்டியலிடப்பட்ட சாதியினர் (SCs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (STs) தவிர, அனைத்து சமூகத்தினருக்கும் சாதி பதிவு செய்யப்பட உள்ளது.
  • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட 29 கேள்விகளுடன் ஒப்பிடச் செய்கையில், இப்புதிய வினாப்பட்டியலில் 13 புதிய கேள்விகள் சேர்க்கப் பட்டு உள்ளன.
  • பெற்றோரின் விவரங்கள், வாழ்க்கைத் துணையின் பெயர், தேசியம், டிஜிட்டல் கல்வியறிவு, நிரந்தர முகவரி மற்றும் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட இடம் ஆகியவை புதிய விவரங்களில் அடங்கும்.
  • பொருந்தக்கூடிய இடங்களில் வங்கிக் கணக்குகள், அலைபேசி எண், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகிய விவரங்களும் சேகரிக்கப்படும்.
  • பனி படர்ந்த பகுதிகளில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களிலும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்