2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மாற்றுத்திறனாளிகள் பிரிவுகள்
August 23 , 2026 21 days 102 0
2016 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (RPwD) சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப் பட்ட அனைத்து 21 குறைபாடுகளையும் தனித்தனியாக பதிவு செய்வதற்குப் பதிலாக, 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாத்தாள் 9 பரந்த குறைபாடு வகைகளை மட்டுமே முன்மொழிகிறது என்று மாற்றுத் திறனாளிகள் உரிமை குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன.
பார்வை, செவித்திறன், பேச்சு, இயக்கம், அறிவுசார் குறைபாடு, மனநல பாதிப்பு, அமிலத் தாக்குதல், நாள்பட்ட நரம்பியல் நோய் மற்றும் இரத்தக் கோளாறு ஆகியவை முன்மொழியப்பட்ட வகைகளில் அடங்கும்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பானது ஆறு குறைபாடு வகைகளின் அடிப்படையில் இந்தியாவின் மக்கள் தொகையில் 2.21% ஆக உள்ள 2.68 கோடி மாற்றுத் திறனாளிகளைப் பதிவு செய்தது.
2016 ஆம் ஆண்டின் RPwD சட்டமானது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, குள்ளத்தன்மை மற்றும் பல குறைபாடுகள் உட்பட அங்கீகரிக்கப் பட்ட குறைபாடுகளை 7-இல் இருந்து 21 ஆக விரிவுபடுத்தியது.
இந்த ஒன்பது வகைகளும் குறிப்பிட்ட குறைபாடுகளை உள்ளடக்கிய பரந்த குழுக்கள் என்றும், தீவிரத்தின் அடிப்படையில் மூன்று குறைபாடுகள் வரை பதிவு செய்ய வினாத் தாள் அனுமதிக்கிறது என்றும் இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகம் (ORGI) தெரிவித்துள்ளது.