2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதன்முறையாக பிச்சைக் காரர்கள் மற்றும் நாடோடிகள் தனிப் பிரிவாகப் பதிவு செய்யப்பட மாட்டார்கள்.
அதற்குப் பதிலாக அவர்கள் பொருளாதாரம் அல்லாத செயல்பாட்டுப் பிரிவில் "மற்றவர்கள்" என்பதன் கீழ் சேர்க்கப்படுவார்கள்.
2001 ஆம் ஆண்டில் 6.3 லட்சமாகவும், 1991 ஆம் ஆண்டில் 5.4 லட்சமாகவும் இருந்த நிலையில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 3.8 லட்சம் பேர் மட்டுமே பிச்சைக்காரர்கள் அல்லது நாடோடிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெயர்வுக்கு ஒரு காரணமாக இயற்கை பேரிடர்களையும் சேர்க்கும்.
பெற்றோர்கள் ஒரே வீட்டில் பட்டியலிடப்படாத நிலையில் அல்லது உயிருடன் இல்லாத போது அவர்களின் பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் மதம் ஆகியவற்றை புதிய புலங்கள் சேகரிக்கும்.
கிடைக்கும் இடங்களில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் / கடவுச்சீட்டு எண்கள் போன்ற விவரங்களும் சேகரிக்கப்படலாம்.