சாதி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குகள் மற்றும் பிற விவரங்கள் உட்பட 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்திற்கான 40 கேள்விகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, பட்டியலிடப்பட்ட சாதியினர் (SCs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (STs) தவிர, அனைத்து சமூகத்தினருக்கும் சாதி பதிவு செய்யப்பட உள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட 29 கேள்விகளுடன் ஒப்பிடச் செய்கையில், இப்புதிய வினாப்பட்டியலில் 13 புதிய கேள்விகள் சேர்க்கப் பட்டு உள்ளன.
பெற்றோரின் விவரங்கள், வாழ்க்கைத் துணையின் பெயர், தேசியம், டிஜிட்டல் கல்வியறிவு, நிரந்தர முகவரி மற்றும் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட இடம் ஆகியவை புதிய விவரங்களில் அடங்கும்.
பொருந்தக்கூடிய இடங்களில் வங்கிக் கணக்குகள், அலைபேசி எண், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகிய விவரங்களும் சேகரிக்கப்படும்.
பனி படர்ந்த பகுதிகளில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களிலும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும்.