2028 ஆம் ஆண்டில் 33 வது பங்குதாரர் மாநாட்டிற்கான குழு
August 1 , 2025 14 hrs 0 min 50 0
2028 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள 33வது ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டை (COP33) நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியா தொடங்கியுள்ளது.
MoEFCC அமைச்சகத்தின் பருவநிலை மாற்றப் பிரிவின் கீழ் உருவாக்கப்பட்ட COP33 பிரிவு இந்த நிகழ்வை மேற்பார்வையிடும்.
இந்த குழுவில் இணைச் செயலாளர் (பருவநிலை மாற்றம்), இயக்குநர்கள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட 11 உறுப்பினர்கள் உள்ளனர்.
துபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டின் போது, பிரதமர் COP 33 மாநாட்டினை இந்தியா நடத்தும் என்று முன்மொழிந்தார்.
UNFCCC அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், 2002 ஆம் ஆண்டில் புது டெல்லியில் நடைபெற்ற COP 8 மாநாட்டிற்கு பிறகு இந்தியா நடத்தும் இரண்டாவது UN பருவநிலை மாநாடாக COP 33 இருக்கும்.