2028 ஒலிம்பிக் போட்டிகளில் புதிய விளையாட்டுப் போட்டிகள்
February 9 , 2022 1375 days 731 0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற உள்ள 2028 ஆம் ஆண்டு கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளில் அலை சறுக்கு, பலகை சறுக்கு மற்றும் மலை ஏறுதல் ஆகிய போட்டிகளைச் சேர்ப்பதற்கான முன்மொழிதலுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
2028 ஆம் ஆண்டு கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளானது XXXIV ஒலிம்பியாய்டு (அ) லாஸ் ஏஞ்செல்ஸ் 2028 என்று அதிகாரப் பூர்வமாக அழைக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளானது பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற உள்ளது.
இத்துடன் 3 கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய 2வது நகராக பாரீஸ் மாற உள்ளது.
அலை சறுக்கு, பலகை சறுக்கு மற்றும் மலை ஏறுதல் ஆகியவை 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப் படுத்தப்பட்டன.