2020 ஆம் ஆண்டின் 50 மிகவும் விரும்பத்தகு மகளிர் பட்டியல் - டைம்ஸ் இதழ்
June 12 , 2021 1483 days 669 0
டைம்ஸ் இதழானது தனது 2020 ஆம் ஆண்டின் 50 மிகவும் விரும்பத்தகு மகளிர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
இது பல்வேறு துறைகளில் திறம்படச் செயலாற்றும் 40 வயதிற்குட்பட்ட பெண்களை சில பரிமாணங்கள் அடிப்படையில் பட்டியலிடுகிறது.
டைம்ஸ் இதழின் இந்தப் பட்டியலில் ரியா சக்கரவர்த்தி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
சுசாந்த்சிங் ராஜ்புத் என்ற நடிகரின் திடீர் மறைவு தொடர்பான சர்ச்சைகளின் காரணமாக கடந்த ஆண்டில் பெரும்பாலான செய்திகளில் இவரது பெயர் அடிபட்டுக் கொண்டு இருந்தது.
2020 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற அட்லின் கேஸ்டிலினோ அவர்கள் இப்பட்டியலில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
நடிகை திசா பதானி, கியாரா அத்வானி மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இதில் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றனர்.