2030 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார அமைப்பின் புதிய உலகளாவிய மலேரியா உத்தி
May 3 , 2024 468 days 343 0
உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மலேரியா திட்டமானது, மலேரியா பாதிப்பு போக்குகளின் பாதையை மாற்ற உதவும் வகையில் 2030 ஆம் ஆண்டு வரை அதன் முன்னுரிமைகள் மற்றும் முக்கியச் செயல்பாடுகளை குறிப்பிட்டுக் காட்டும் ஒரு புதிய செயல்பாட்டு உத்தியை வெளியிட்டுள்ளது.
இந்த உத்தியானது உலக சுகாதார அமைப்பு அதன் முயற்சிகளில் கவனம் செலுத்த உள்ள 4 உத்திசார் நோக்கங்களைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
விதிமுறைகள் மற்றும் தரநிலைகளை உருவாக்குதல்,
புதிய கருவிகள் மற்றும் புதுமைகளை அறிமுகப்படுத்துதல்,
தாக்கத்திற்கான உத்திசார் தகவலை ஊக்குவித்தல், மற்றும்
உலகளாவிய மலேரியா எதிர் நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு தலைமையை வழங்குதல்.
2022 ஆம் ஆண்டில் உலகளவில் 608,000 மலேரியா காரணமான உயிரிழப்புகளும், 249 மில்லியன் புதிய மலேரியா பாதிப்புகளும் பதிவானதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
உலகளவில் 95% மலேரியா காரணமான உயிரிழப்புகளுடனும் 94% பாதிப்புகளுடனும் ஆப்பிரிக்கா அதிக விகிதாசாரப் பாதிப்பினைக் கொண்டுள்ளது.