2030 ஆம் ஆண்டில் உலகம் : பொதுக் கணக்கெடுப்பு அறிக்கை
April 7 , 2021 1914 days 915 0
இந்த அறிக்கை சமீபத்தில் UNESCO அமைப்பினால் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையானது மே 2020 மற்றும் செப்டம்பர் 2020 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2030 ஆம் ஆண்டில் அமைதியான சமூகத்திற்கு மிகப்பெரிய சவால்களாக
காலநிலை மாற்றம்,
வன்முறை மற்றும் மோதல்,
பல்லுயிர்ப் பெருக்கத்தின் இழப்பு மற்றும் பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை,
தண்ணீர் மற்றும் வீட்டுவசதி, உணவுத் தட்டுப்பாடு ஆகியவை இருக்கும்.
கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களைப் பொருத்தவரை 2030 ஆம் ஆண்டில் எதிர் கொள்ளவிருக்கும் பல்வேறு சிக்கல்களுக்குக் கல்வி ஒன்றே முக்கிய தீர்வாக இருக்கும்.
இருப்பினும், வட அமெரிக்கர்கள் (அமெரிக்கா, கனடா) கல்வியில் அல்லாது அறிவியலையே நம்புகின்றனர்.
கல்வியைத் தவிர்த்து சர்வதேச ஒத்துழைப்பே இதற்கு மற்றுமொரு தீர்வாக இருக்கும்.