2030 ஆம் ஆண்டில் உலகின் 3வது மிகப்பெரிய ஆற்றல் நுகர்வோர் நாடு
February 13 , 2021 1646 days 764 0
சர்வதேச ஆற்றல் நிறுவனமானது (IEA) சமீபத்தில் “இந்திய ஆற்றல் கண்ணோட்டம் 2021” என்ற தலைப்பு கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2030 ஆம் ஆண்டில் இந்தியாவானது சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகின் 3வது மிகப்பெரிய ஆற்றல் நுகர்வாளர் நாடாக ஐரோப்பிய ஒன்றியத்தை முந்தவுள்ளது.
மேலும் இந்த அறிக்கையானது இந்தியாவானது 2019-2040 காலத்தில் உலகத் தேவையின் வளர்ச்சியில் கால் பகுதி வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றது.