TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டில் 27 சதவிகித எத்தனால் கலப்பு

August 28 , 2025 28 days 53 0
  • எரிசக்திப் பாதுகாப்பை அதிகரிக்கவும், எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் 2030 ஆம் ஆண்டில் பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 27 சதவீதமாக அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் 1.53 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட எத்தனால் கலப்பு சதவீதமானது 2025 ஆம் ஆண்டில் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பதோடு இது அந்நியச் செலாவணியைச் சேமிப்பதோடு, உமிழ்வையும் குறைக்கிறது.
  • எத்தனால், கார்பன் மோனாக்சைடு உமிழ்வைக் கணிசமாகக் குறைத்தாலும், குறிப்பாக நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் கரும்பு சாகுபடிக்காக அதிக நீர்ப் பயன்பாடு தேவைப்படுகிறது.
  • அதிகரித்து வரும் எத்தனால் தேவையானது மக்காச்சோளப் பற்றாக்குறைக்கு பங்களித்துள்ளது என்பதோடு இது உணவுப் பாதுகாப்பைப் பாதிக்கிறது மற்றும் பண வீக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது.
  • அதிக எத்தனால் கலவை கொண்ட எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் அவற்றுக்காக வடிவமைக்கப்படா விட்டால் அல்லது மாற்றியமைக்கப்படா விட்டால் எரிபொருள் திறன் குறையக்கூடும்.
  • பயிர்த் தாளடிகள்/கழிவுகள் மற்றும் கழிவுகளிலிருந்துப் பெறப்படும் இரண்டாம் தர எத்தனால் என்பது நிலையான வளர்ச்சிக்கும் உணவுப் பயிர் சார்புநிலையைக் குறைப்பதற்கும் மிகவும் முக்கியமானது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்