2030 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான அவசர நடவடிக்கை
June 14 , 2021 1491 days 649 0
2030 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்காக வேண்டி ஒரு அவசர நடவடிக்கைக்கான பிரகடனத்திற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஒப்புதல் வழங்கியுள்ளது.
கோவிட் – 19 பெருந்தொற்றானது ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளதாகவும் எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் நோய்க் கண்டறிதல் போன்றவற்றினை அணுகுவதற்கான வாய்ப்புகளை தடம் மாற்றியுள்ளதாகவும் இது குறிப்பிட்டுள்ளது.
வருடாந்திர புதிய எய்ட்ஸ் (HIV) தொற்றுக்கான எண்ணிக்கையை 3,70,000க்கும் கீழ் குறைக்குமாறு உறுப்பினர் நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் சபையானது அறிவுறுத்தி உள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் தொடர்பான வருடாந்திர இறப்பு எண்ணிக்கையை 2,50,000க்கும் கீழ் குறைக்குமாறும் வேண்டிஇது வலியுறுத்தி உள்ளது.