2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு
July 1 , 2025 9 hrs 0 min 30 0
இந்தியா உட்பட ஆசிய-பசிபிக் பகுதிகளில் உள்ள அரசாங்கங்கள் பாங்காக்கில் ஒரு முக்கிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன.
2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்துப் பிறப்புகளும் பதிவு செய்யப் படுவதையும் அனைத்து இறப்புகளும் பதிவு செய்யப் படுவதையும் உறுதி செய்வதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற குடிமைப் பதிவு மற்றும் முக்கியப் புள்ளி விவரங்கள் (CRVS) தொடர்பான மூன்றாவது அமைச்சர்கள் மாநாட்டில் இந்த ஒரு முடிவு ஆனது மேற்கொள்ளப்பட்டது.
CRVS என்பது ஒரு சட்ட அமைப்பின் கீழ் பிறப்புகள், இறப்புகள், திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் போன்ற முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளின் அதிகாரப்பூர்வ பதிவைக் குறிக்கிறது.
CRVS புள்ளிவிவரங்கள் கருத்தக்கத்திற்கான பின்னணியில் உள்ள முன்னணி அமைப்பு UN ESCAP (ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம்) ஆகும்.
இந்தத் தீர்மானம் ஆனது, பிறப்பு பதிவு உட்பட அனைவருக்குமான ஒரு சட்டப் பூர்வ அடையாளம் 16.9 என்ற SDG இலக்கினை ஆதரிக்கிறது.
2012 ஆம் ஆண்டு முதல், பதிவு செய்யப் படாத ஐந்து வயத்திற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 135 மில்லியனிலிருந்து 51 மில்லியனாகக் குறைந்துள்ளது.
29 நாடுகள் தற்போது 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிறப்புகளைப் பதிவு செய்கின்றன, மேலும் 30 நாடுகள் இறப்புகளுக்கும் அத்தகைய சதவீதத்திலானப் பதிவுகளைப் பதிவு செய்கின்றன.
இந்த முன்னேற்றம் பதிவவாகியிருந்த போதிலும், 14 மில்லியன் குழந்தைகள் இன்னும் ஒரு வயதிற்குள் தங்கள் பிறப்புகளைப் பதிவு செய்யவில்லை.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 6.9 மில்லியன் உயிரிழப்புகள் பெரும்பாலும் மருத்துவ மனைகளுக்கு வெளியே அல்லது தொலைதூரப் பகுதிகளில் பதிவு செய்யப்படாமல் போகின்றன.