TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டிற்குள் எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஒழிப்பு இலக்கு

October 14 , 2026 8 days 113 0
  • தமிழ்நாடானது, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தின் (NACP-V) இலக்கான 95-95-95 என்பதை 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அடைந்தது.
  • 95-95-95 இலக்கு என்பது, எச்.ஐ.வி-யுடன் வாழும் மக்களில் 95% பேர் தங்களது பாதிப்பு நிலையை அறிந்திருக்கிறார்கள் என்பதையும், கண்டறியப்பட்டவர்களில் 95% பேர் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையைப் (ART) பெறுகிறார்கள் என்பதையும், சிகிச்சை பெறுபவர்களில் 95% பேர் வைரஸ் ஒடுக்குமுறையை அடைகிறார்கள் என்பதையும் குறிக்கிறது.
  • தமிழ்நாட்டில் எச்.ஐ.வி பரவலானது 2010 ஆம் ஆண்டில் 0.40% ஆக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் 0.19% ஆகக் குறைந்துள்ளது; 2030 ஆம் ஆண்டிற்குள் எச்.ஐ.வி/எய்ட்ஸ் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இம்மாநிலத்தில் 1,63,151 பேர் சிகிச்சையில் உள்ளனர், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 2,656 எச்.ஐ.வி பரிசோதனை மையங்கள் உள்ளன, மேலும் 2,329 கல்லூரிகள் மற்றும் 9,830 பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன.
  • எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவியை தமிழ்நாடு அரசு ரூ.1,500 இலிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தியுள்ளதுடன், இதற்காகக் கூடுதலாக ரூ.1.21 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்