2030 ஆம் ஆண்டில் இந்தியா-கத்தார் இடையிலான வர்த்தகம்
February 21 , 2025 200 days 172 0
இந்தியா மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தங்கள் இருதரப்பு உறவுகளை ஓர் உத்தி சார் கூட்டாண்மையாக மேம்படுத்த முடிவு செய்துள்ளன.
இரு நாடுகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போது 14.08 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட தங்களது இருதரப்பு வர்த்தகத்தினை சுமார் 28 பில்லியன் டாலர்கள் மதிப்புக் கொண்டதாக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளன.
கத்தார் நாட்டு முதலீட்டு ஆணையம் (QIA) ஆனது, ஏற்கனவே இந்தியாவில் சுமார் 1.5 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது.