இந்தியாவின் அணுசக்தித் திறனானது 2030 ஆம் ஆண்டில் தற்போது உள்ள 6,780 மெகா வாட் திறனிலிருந்து 22,480 மெகாவாட் திறனாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியாவில் தற்போது 22 அணு உலைகள் உள்ளன.
காக்ரபார் அணு உலை-3 (700 மெகாவாட்) ஆனது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மின்சாரக் கட்டமைப்போடு இணைக்கப்பட்டது.
8000 மெகாவாட் திறனுடைய 10 அணு உலைகள் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளன.
அதில் பாரதிய நபிக்யா வித்யுத் நிகாம் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டு வரும் 500 மெகாவாட் திறனுடைய முன்மாதிரி அதிவேக உற்பத்தி உலையும் உள்ளடங்கும்.
கூடுதலாக, ஒவ்வொன்றும் 700 மெகாவாட் திறன் கொண்ட உள்நாட்டிலேயேத் தயாரிக்கப் பட்ட அழுத்த கனநீர் உலைகள் (Pressurized Heavy Water Reactors) தொடர் முறையில் (fleet) நிறுவப்பட உள்ளன.