முழு நேர (Round-the-clock-RTC) தூய ஆற்றல் என்பது சூரிய ஒளி, காற்று மற்றும் மின்கல சேமிப்பு போன்ற கார்பன் உமிழ்வில்லா மூலங்களுடன் கூடிய மின் பயன்பாட்டைப் குறிக்கிறது.
இந்த RTC வகை ஆற்றல் மூலம் இந்தியாவின் மின் பரிமாற்ற அமைப்பினைக் கொண்டு ஆண்டுதோறும் ₹9,000 கோடி ($1 பில்லியன்) வரை சேமிக்க முடியும்.
இப்புதிய அறிக்கையானது இவ்வகை தூய ஆற்றல் 70% செயல்பட்டால் 2.4% அளவில் உமிழ்வைக் குறைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது என்பதோடு, இது வருடாந்திர செயல்பாட்டால் எட்டப்பட்ட 1% குறைப்பை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
100% RTC செயல்பட்டால்/பொருத்தத்தால், உமிழ்வுக் குறைப்புகள் 7% வரையில் உயரக் கூடும்.
52 ஜிகாவாட் (GW) RTC தூய்மை மின்சாரத் திறனைப் பயன்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் திட்டமிடப் பட்ட தேசிய தேவையில் 5% அளவைப் பூர்த்தி செய்ய முடியும்.
2030 ஆம் ஆண்டுக்குள் 500 GW புதைபடிவ எரிபொருள் அல்லாத மின்சாரத் திறன் கொண்ட இந்தியாவின் இலக்குடன் இணைந்தப் பெரும் செலவு குறைந்த, காலநிலை -திறன்மிகு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தீர்வாக RTC தூய மின்சாரம் இருக்குமென இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.