சமீபத்தில் ரஷ்ய நாட்டுப் பாராளுமன்றத்தின் கீழவையான டுமா என்ற அவையானது ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவானது 2024 ஆம் ஆண்டில் தொடங்கி மேலும் இரண்டு முறை தற்போதைய அதிபரான விளாடிமிர் புதினின் ஆட்சி தொடர வழிவகுக்கிறது.
இந்த மசோதா, 2024 ஆம் ஆண்டில் புதின் தனது ஆட்சியைப் புதிதாக தொடங்கச் செய்வதற்கும் 2036 ஆம் ஆண்டு வரைக்கான இரண்டு பதவிக் காலம் வரை அந்தப் பதவியில் நீடிப்பதற்கும் சேர்த்து வாய்ப்பினை வழங்குகிறது.