2041 ஆம் ஆண்டிற்குள் கார்பன் நடுநிலைத் தன்மை கொண்ட சுற்றுலா தலம்
November 15 , 2022 987 days 449 0
மதுரா-பிருந்தாவனம் ஆனது 2041 ஆம் ஆண்டிற்குள் "நிகர சுழியக் கார்பன் உமிழ்வு" கொண்ட சுற்றுலா தலமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதனால் பிராஜ் பகுதி முழுவதும் சுற்றுலா வாகனங்கள் இயங்கத் தடை செய்யப் படும்.
பிருந்தாவனம் மற்றும் கிருஷ்ண ஜென்மபூமி போன்ற சில புகழ் பெற்ற யாத்திரை மையங்கள் இப்பகுதியினுள் அடங்கும்.
அதற்கு மாறாக, பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்கள் மட்டுமே அப்பகுதிக்குள் அனுமதிக்கப்படும்.
இப்பகுதியில் உள்ள அனைத்து 252 நீர்நிலைகள் மற்றும் 24 காடுகளும் புணரமைக்கப் படும்.
இந்தப் பிராந்தியத்தின் எட்டு முக்கிய நகரங்களும் உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் குறுகிய-அகல இரயில் பாதை மூலம் இணைக்கப்படும்.
மதுரா மற்றும் பிருந்தாவன் ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் தற்போதைய 12.9 கிமீ குறுகிய இரயில் பாதையானது மீண்டும் மேம்படுத்தப்படும்.
நிகர சுழியக் கார்பன் உமிழ்வானது கார்பன் நடுநிலை என்று குறிப்பிடப்படுகிறது.
இதன் பொருள் ஒரு நாடு/மாநிலம் அதன் உமிழ்வை சுழிய நிலை அளவிற்குக் குறைக்கும் என்பதல்ல.
அதன் பொருள், ஒரு நாட்டின்/மாநிலத்தின் உமிழ்வுகள் ஆனது, வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களை உறிஞ்சி அகற்றுவதன் மூலம் ஈடுசெய்யப்படும் ஒரு நிலையாகும்.